தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 50,000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் 

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 50,000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் 

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 50,000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் 

எழுத்தாளர் Staff Writer

11 Aug, 2021 | 9:59 am

Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 138 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 53,942 பேர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 50,000 இற்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் 14 பகுதிகளில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோர் தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்