Colombo (News 1st) நேற்று (09) காலை 06 மணி முதல் இன்று (10) காலை 06 மணி வரையான காலப்பகுதியில் நாட்டில் புதிதாக 2,953 கொரோனா நோயாளர்கள் பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவர்களில் 15 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

கொழும்பு மாவட்டத்தில் 312 நபர்களும் கம்பஹா மாவட்டத்தில் 767 பேரும் யாழ். மாவட்டத்தில் நால்வரும் புத்தளம் மாவட்டத்தில் 56 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 294 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 09 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 53 நபர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 28 பேரும் வவுனியா மாவட்டத்தில் 41 பேரும் மன்னார் மாவட்டத்தில் ஐவரும் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் (08) 111 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (09) தெரிவித்திருந்தார்.
நாட்டில் நாளொன்றில் உறுதி செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் இவையாகும்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5,222 ஆக உயர்வடைந்துள்ளது.
