நிர்ணய விலையை மீறும் வியாபாரிகளுக்கான அபராத தொகையை அதிகரிக்க தீர்மானம்

நிர்ணய விலையை மீறும் வியாபாரிகளுக்கான அபராத தொகையை அதிகரிக்க தீர்மானம்

நிர்ணய விலையை மீறும் வியாபாரிகளுக்கான அபராத தொகையை அதிகரிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2021 | 10:25 am

Colombo (News 1st) நிர்ணய விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டுறவு சேவை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசினால் பெயரிடப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் உணவு வகைகளுக்கு இந்த தீர்மானம் செல்லுபடியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்