நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அறுவை சிகிச்சை

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அறுவை சிகிச்சை

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அறுவை சிகிச்சை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Aug, 2021 | 9:31 am

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் கீழே வீழ்ந்ததை அடுத்து காயமடைந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் சிறியளவிலான அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நலம் பெறுவேன் எனவும் கவலைப்படத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குணச்சித்திர பாத்திரம் மற்றும் வில்லன் என பல கோணங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.

தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் தனது திறமைகளை வௌிப்படுத்தி வருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்