திருக்கோணேஸ்வர ஆலய மாதுமை அம்பாள் தேர் திருவிழா

திருக்கோணேஸ்வர ஆலய மாதுமை அம்பாள் தேர் திருவிழா

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2021 | 1:10 pm

Colombo (News 1st) பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாள் தேர் திருவிழா இன்று (10) நடைபெற்றது.

தேவார முதலி திருஞானசம்பந்தர் கோணமாமலையமர்ந்தாரே என பாடியருளிய திருக்கோணேஸ்வரத்தின் மாதுமை அம்பாள் திருவிழா கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை 7 மணியளவில் மாதுமை அம்பாள் அழகிய தேரில் எழுந்தருளினார்.

ஆலயத்தை வலம் வந்த தேர் காலை 9 மணியளவில் கோபுர வாசலை அடைந்தது.

மாதுமை அம்பாளுக்கு பச்சை சாத்தி அர்ச்சனை நடத்தப்பட்ட பின்னர் அம்பாள் ஆலயத்திற்குள் எழுந்தருளினார்.

திருவிழா தேர்பவனி கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்