ஆப்கனில் 3 நாட்களில் 27 சிறுவர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தொடரும் தலிபான் தாக்குதல் : 3 நாட்களில் 27 சிறுவர்கள் உயிரிழப்பு

by Staff Writer 10-08-2021 | 9:54 AM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானில் 03 நாட்களில் குறைந்தது 27 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த 03 நாட்களில் 136 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். தலிபான் மற்றும் ஆப்கன் அரச படையினர் இடையேயான மோதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநாவின் யுனிசெப் அமைப்பு (Unicef) தெரிவித்துள்ளது. ஆகவே, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் செயற்படுமாறு யுனிசெப் அமைப்பு,  இருதரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்பட்டதிலிருந்து தலிபான்களால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதுடன் இதுவரை 06 தலைநகரங்களை கைப்பற்றியுள்ளனர். நாட்டில் மோதலை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான சர்வதேசத்தின் அழைப்பை, தலிபான்கள் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த மாதம் இடம்பெற்ற மோதல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஏனைய செய்திகள்