பண்ணை பாலத்தில் Selfie எடுக்க முயன்ற போது தவறி வீழ்ந்த இளைஞரின் சடலம் மீட்பு

by Staff Writer 09-08-2021 | 1:06 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பண்ணை பாலத்தில் Selfie எடுக்க முயன்ற போது தவறி வீழ்ந்த இளைஞரின் சடலம் இன்று (09) மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் நேற்று (08) மாலை Selfie எடுப்பதற்கு முயற்சித்த போது பாலத்திலிருந்து தவறி, நீரில் வீழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மற்றும் கடற்படையினரின் தேடுதலின் பின்னர் இன்று (09) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.