விமானப்படை களஞ்சியசாலையில் வெடிபொருள் திருடிய நால்வர் கைது

விமானப்படை களஞ்சியசாலையில் வெடிபொருள் திருடிய நால்வர் கைது

விமானப்படை களஞ்சியசாலையில் வெடிபொருள் திருடிய நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2021 | 3:37 pm

Colombo (News 1st) விமானப்படையின் வெலிசறை களஞ்சியசாலையில் அமோனியம் நைட்ரேட் (Ammonium Nitrate) என அழைக்கப்படும் வெடிபொருள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களால் திருடப்பட்ட வெடிபொருளானது கற்குவாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தமது அதிகாரிகளின் முறைப்பாட்டிற்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க, நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்