by Staff Writer 09-08-2021 | 11:22 AM
Colombo (News 1st) வட கொரியாவில் பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை முன்னெடுக்குமாறு அந் நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன், இராணுவத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வெள்ளத்தினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், சுமார் 5000 பேர் வெளியேற்றப்பட்டதாக அரச ஊடகம் அறிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கான ஹெக்டேயர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.