தொடுவாய் கடற்பரப்பில் ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றப்பட்டது

தொடுவாய் கடற்பரப்பில் ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றப்பட்டது

தொடுவாய் கடற்பரப்பில் ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2021 | 4:09 pm

Colombo (News 1st) சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்படவிருந்த 5,300 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் தொகையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சிலாபம் – தொடுவாய் கடற்பரப்பில் இந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்தது.

சர்வதேச கடற்பரப்பிலிருந்து சட்டவிரோதமாக நாட்டின் கடற்பரப்பிற்குள் கொண்டுவர முற்பட்ட போதே இவை கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

143 உரப்பைகளில் இவை பொதியிடப்பட்டிருந்ததாக கடற்படையினர் கூறினர்.

நாட்டின் கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு படகிலிருந்த 5 இந்திய பிரஜைகளும் கடல் எல்லைக்கு அப்பால் விடப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்