by Staff Writer 07-08-2021 | 10:28 AM
Colombo (News 1st) பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தங்களின் தொழிலுக்கான அடையாள அட்டையை வைத்திருப்பதை எதிர்வரும் திங்கட்கிழமை (09) முதல் கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொது போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் பயன்படுத்துகின்றனரா என்பது தொடர்பில் திடீர் சுற்றிவளைப்புகளினூடாக ஆராயவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
முறையற்ற வகையில் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களை திடீர் சோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
பொது போக்குவரத்து சேவையை இடைநிறுத்தும் அளவிற்கு வைரஸ் தாக்கம் காணப்படுவதாகவும், அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் போக்குவரத்து வசதி கருதி மாத்திரமே தொடர்ந்தும் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.