AstraZeneca 2ஆவது டோஸை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம்

பம்பலப்பிட்டி பொலிஸ் படைத் தலைமையகத்தில் AstraZeneca இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்

by Staff Writer 07-08-2021 | 12:50 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு தடுப்பூசியையேனும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸின் சமூக பொலிஸ் பிரிவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் சமூக பொலிஸின் தலையீட்டில் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பு மாநகர எல்லைக்குள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்களை சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு வருகை தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, AstraZeneca Covishield இரண்டாவது தடுப்பூசியை இதுவரை பொற்றுக்கொள்ளாதவர்கள் இன்றும் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் மேலதிக படைத்தலைமையகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வோர், முதலாவது தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டையையும் அடையாள அட்டையையும் கொண்டு செல்ல வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். காலை 09 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பம்பலப்பிட்டி பொலிஸ் விளையாட்டரங்கிற்கு அருகில் அமைந்துள்ள பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.