டாம் வீதி தொடர்மாடியில் பரவிய தீ அணைக்கப்பட்டுள்ளது

by Staff Writer 07-08-2021 | 3:30 PM
UPDATE: கொழும்பு டாம் வீதியிலுள்ள தொடர்மாடி ஒன்றில் இன்று பகல் பரவிய தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது. கடைத்தொகுதிகள் காணப்படும் தீப்பற்றிய கட்டடத்தின் மேல் மாடி களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, துறைமுக தீயணைப்பு பிரிவு, கடற்படை மற்றும் விமானப்படையினர் இணைந்து தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். டாம் வீதி பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.   Colombo (News 1st) கொழும்பு - டாம் வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக 08 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இன்று மதியம் 12.50 அளவில் தீ பரவியதாகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை தொடர்வதாகவும் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.