by Staff Writer 07-08-2021 | 5:14 PM
Colombo (News 1st) மஸ்கெலியா - கெனியன் நீர்த்தேக்கத்தில் மிதந்து வந்த சிறுத்தையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
08 வயதுடைய சிறுத்தையின் உடலே மீட்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் இந்நாட்களில் நிலவும் பலத்த மழையுடனான வானிலையால் கெனியன் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குறித்த சிறுத்தை நீர்த்தேக்கத்தை கடக்க முற்பட்ட நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
உயிரிழந்த சிறுத்தை நடமாடும் காட்சி, கெனியன் நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
சிறுத்தையின் உடலை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரிகளும் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளும் இணைந்து மீட்டுள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சிறுத்தையின் உடல் ரன்தெனிய கால்நடை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.