முறையற்ற வகையில் சொத்து சேகரிப்பு: குடு ஆஷா கைது

முறையற்ற வகையில் சொத்து சேகரிப்பு: குடு ஆஷா கைது

முறையற்ற வகையில் சொத்து சேகரிப்பு: குடு ஆஷா கைது

எழுத்தாளர் Staff Writer

07 Aug, 2021 | 10:35 am

Colombo (News 1st) முறையற்ற வகையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் குடு ஆஷா என்றழைக்கப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பிரிவினரால் சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய, தற்போது உயிரிழந்துள்ள சமியா என்ற நபருடன் உறவை பேணிய 46 வயதான பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்வத்துப்பிட்டிய பகுதியில் 50 இலட்சம் ரூபாவிற்கு கடைத்தொகுதி ஒன்றை குறித்த பெண் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதனை தவிர, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவரின் வங்கிக் கணக்கினூடாக 23 மில்லியன் ரூபா பணம் பரிமாறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குடு ஆஷாவை கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி, 14 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்