ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட 16 தமிழ் அரசியல் கைதிகளுக்கு சுயதொழில் செய்ய நிதியுதவி

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட 16 தமிழ் அரசியல் கைதிகளுக்கு சுயதொழில் செய்ய நிதியுதவி

எழுத்தாளர் Staff Writer

07 Aug, 2021 | 7:28 pm

Colombo (News 1st) அண்மையில் சிறைச்சாலைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் 16 பேருக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

மூன்று தசாப்த காலமாக நாட்டில் பயங்கரவாதிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது, சில காரணிகளால் அந்த செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு, பின்னர் நீதிமன்றம் சென்று அவர்கள் பல வருடங்கள் சிறையிலிருந்தனர். எமது நாட்டிலுள்ள அந்த தமிழ் மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டு, அவர்களது ஊரான, நாம் தற்போது இருக்கும் இந்த யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளனர். இலங்கையர்களாகிய இவர்கள், நாட்டில் COVID தொற்றுள்ள இந்த காலகட்டத்தில் சுயதொழிலில் ஈடுபடுவதற்காக, இந்த பகுதியை சேர்ந்த நன்கொடையாளர் ஒருவரால் நிதியுதவி வழங்கப்பட்டது. பொது மன்னிப்பு பெற்று விடுதலை செய்யப்பட்ட 16 பேருக்கு, சுய தொழிலில் ஈடுபடுவதற்காக தலா 1 இலட்சம் வழங்கும் நிகழ்வினை யாழ்ப்பாணத்தின் இன்று நாம் முன்னெடுத்தோம்.

அரசியல் கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக, நன்கொடையாளர் ஒருவரின் நிதியுதவியின் கீழ் இந்த உதவித் திட்டம் வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்