கண்டியில் இருந்து ஆரம்பமான எதிர்ப்பு பேரணி இடைநிறுத்தம்

கண்டியில் இருந்து ஆரம்பமான எதிர்ப்பு பேரணி இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

07 Aug, 2021 | 7:04 pm

Colombo (News 1st) ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரி தேசிய ஒன்றியம் கண்டியில் ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி நாட்டின் COVID நிலைமையை கருத்திற்கொண்டு இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பஸ்யாலையில் இன்று எதிர்ப்பு பேரணி ஆரம்பமாகவிருந்ததுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் பேரணி தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

விசேட வைத்தியர்களின் சங்கமும் மகாசங்கத்தினரும் விடுத்த கோரிக்கைக்கு அமைய, நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு பேரணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு எதிரான தேசிய ஒன்றியத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்