பெலாரஸ் வீராங்கனையை பலவந்தமாக திருப்பியனுப்ப முயன்ற பயிற்சியாளர்கள் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வௌியேற்றம்

பெலாரஸ் வீராங்கனையை பலவந்தமாக திருப்பியனுப்ப முயன்ற பயிற்சியாளர்கள் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வௌியேற்றம்

பெலாரஸ் வீராங்கனையை பலவந்தமாக திருப்பியனுப்ப முயன்ற பயிற்சியாளர்கள் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வௌியேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2021 | 5:21 pm

Colombo (News 1st) பெலாரஸ் குறுந்தூர ஓட்ட வீராங்கனை Krystina Timanovskaya-வை பலவந்தமாக நாட்டிற்கு அனுப்ப முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இரண்டு பயிற்றுவிப்பாளர்களை ஒலிம்பிக் கிராமத்திலிருந்து சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் வௌியேற்றியுள்ளது.

Artur Shimak மற்றும் Yury Maisevich ஆகியோர் டோக்கியோவிலுள்ள ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வௌியேறியதை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் உறுதிப்படுத்தியுள்ளது.

அவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டிற்கு திரும்புமாறு தமது அணியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, பெலாரஸ் வீராங்கனை Krystina Timanovskaya நிராகரித்தமை சர்வதேசத்தின் கவனத்தை அவர் மீதும் பெலாரஸ் அரசாங்கத்தின் மீதும் திருப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உணர்ச்சிவசப்படும் நிலை காரணமாகவே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டதாக பெலாரஸ் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த விடயம் பொய்யானது என Krystina Timanovskaya தெரிவித்துள்ளார்.

தமது பயிற்றுவிப்பாளர்களின் அலட்சியப்போக்கு தொடர்பில் இன்ஸ்டாகிராமில் தாம் கருத்துத் தெரிவித்தமைக்காகவே அணியிலிருந்து நீக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பெஶ்ரீாரஸிற்கு திரும்பிச் சென்றால் தனக்கு ஆபத்து ஏற்படும் என Krystina Timanovskaya தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அவருக்கு அடைக்கலமளிக்க போலந்து முன்வந்தது. மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்கப்பட்டது. இதனையடுத்து, அவர் தற்போது போலந்தில் உள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்