தமிழகத்தில் கைதான 38 இலங்கையர்கள் பெங்களூர் மத்திய சிறைக்கு மாற்றம்

தமிழகத்தில் கைதான 38 இலங்கையர்கள் பெங்களூர் மத்திய சிறைக்கு மாற்றம்

தமிழகத்தில் கைதான 38 இலங்கையர்கள் பெங்களூர் மத்திய சிறைக்கு மாற்றம்

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2021 | 4:43 pm

Colombo (News 1st) கடந்த மார்ச் 17 ஆம் திகதி சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகம் சென்ற 38 இலங்கையர்கள் பெங்களூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் படகு மூலம் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சென்றடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் சட்டவிரோத குடிவரவு, ஆட்கடத்தல் தொடர்பில் கடந்த ஜூன் மாதத்தில் கைது செய்யப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் கனடா செல்வதற்காக முகவர்களிடம் தலா 10 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மங்களூரில் இருந்து வௌியேறவிருந்த நிலையில், பெங்களூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்