இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2021 | 3:48 pm

Colombo (News 1st) தற்போதைய கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விசேட அறிவிப்பை விடுத்துள்ளார்.

500 ஆசனங்களுக்கும் அதிகம் காணப்படும் மண்டபங்களில் 150 பேர் வரை மாத்திரம் கலந்துகொள்ளும் வகையில் திருமண நிகழ்வுகளை நடத்த முடியும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

500 ஆசனங்களுக்கும் குறைந்தளவில் காணப்படும் மண்டபங்களில் 100 பேர் வரை மாத்திரம் கலந்துகொள்ளும் வகையில் திருமண நிகழ்வுகளை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண சடங்குகளில் அதிகபட்சம் 25 பேர் வரை மாத்திரமே பங்கேற்க முடியும் எனவும் அனைத்து அரச நிகழ்வுகளும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் ஊழியர்களை பணிக்கமர்த்துவது தொடர்பான தீர்மானத்தை , அந்தந்த நிறுவன தலைவர்கள் மேற்கொள்ள முடியும் என இராணுவத் தளபதியில் விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்