by Bella Dalima 05-08-2021 | 7:23 PM
Colombo (News 1st) மருத்துவ சேவையாளர்கள், தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (05) காலை முதல் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் பொது வைத்தியசாலையிலும் இன்று காலை 8 மணி முதல் 4 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று காலை 7 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். இந்த பணிப்பகிஷ்கரிப்பு காலை 11 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. இதனால் நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கேகாலை - கரவனெல்ல ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களும் தாதியர்களும் இன்று காலை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
கம்பளை ஆதார வைத்தியசாலையிலும் இன்று காலை 7 மணி முதல் தாதியர்கள் வைத்தியசாலைக்கு முன்பாக பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையிலும் இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.