by Bella Dalima 05-08-2021 | 9:36 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு மாநகர சபையின் இன்றைய அமர்வில் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் மறைந்த தலைவர் அமரர் R.ராஜமகேந்திரன் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து ஆரம்பமான சபை அமர்வில், சிறுமி ஹிஷாலினிக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன், ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் கண்டன தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டது.