by Bella Dalima 05-08-2021 | 1:23 PM
Colombo (News 1st) நைட்ரஜன் சேதனப் பசளையை செப்டம்பர் 15 ஆம் திகதியின் பின்னர் நாடளாவிய ரீதியிலுள்ள விவசாய மத்திய நிலையங்களூடாக விநியோகிக்கவுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்தார்.
சேதனப் பசளை பயன்பாடு தொடர்பில் விவசாயிகளை தௌிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, விவசாய பணிப்பாளர் நாயகம் இதனை குறிப்பிட்டார்.
இரசாயன உர இறக்குமதி மற்றும் உர நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 56 பில்லியன் ரூபா, சேதனப் பசளைக்காக பயன்படுத்தப்படவுள்ளாதாகவும் தேவையேற்படின், குறைநிரப்பு பிரேரணை மூலம் நிதி ஒதுக்கப்படும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் S.R. ஆட்டிகல இந்த ஊடக சந்திப்பின் போது கூறினார்.
தேசிய விவசாய கொள்கை அடுத்த மாதம் வௌியிடப்படும் எனவும் இந்த ஊடக சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.