வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகளில் மருத்துவ சேவையாளர்களும் தாதியரும் பணிப்பகிஷ்கரிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகளில் மருத்துவ சேவையாளர்களும் தாதியரும் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Aug, 2021 | 7:23 pm

Colombo (News 1st) மருத்துவ சேவையாளர்கள், தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (05) காலை முதல் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பொது வைத்தியசாலையிலும் இன்று காலை 8 மணி முதல் 4 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று காலை 7 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். இந்த பணிப்பகிஷ்கரிப்பு காலை 11 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. இதனால் நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கேகாலை – கரவனெல்ல ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களும் தாதியர்களும் இன்று காலை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

கம்பளை ஆதார வைத்தியசாலையிலும் இன்று காலை 7 மணி முதல் தாதியர்கள் வைத்தியசாலைக்கு முன்பாக பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையிலும் இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்