எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைதான 44 ஆசிரியர்களும் பிணையில் விடுவிப்பு

எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைதான 44 ஆசிரியர்களும் பிணையில் விடுவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Aug, 2021 | 8:16 pm

Colombo (News 1st) எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டு திரும்பிய போது நேற்று (04) பிற்பகல் கைது செய்யப்பட்ட 44 ஆசிரியர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கோட்டை நீதவான் முன்னிலையில் ஆசிரியர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட ஆசிரியர்கள் கோட்டை நீதவான் பிரியந்த லியனேகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்