கொத்தலாவல சட்டமூலத்தை சமர்ப்பிக்க போவதில்லை

கொத்தலாவல சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க போவதில்லை:  சமல் ராஜபக்ஸ 

by Staff Writer 04-08-2021 | 10:35 AM
Colombo (News 1st) கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க போவதில்லை என அரச பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே, அவர் இதனை கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்க வேண்டியுள்ளதாக தாம் நம்புவதால், சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அரச பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.