by Staff Writer 04-08-2021 | 10:54 AM
Colombo (News 1st) ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ் ஊழியர்களுக்கு எதிராக இன்று முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
அவ்வாறான ஊழியர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
குற்றமிழைக்கும் சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன், போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் நேற்று பயணிகள் பஸ்களில் நின்றுகொண்டு பயணித்தமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.