விமான பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடைமாறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

விமான பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடைமாறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

விமான பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடைமாறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2021 | 1:54 pm

Colombo (News 1st) இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் விமான பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடைமாறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை (05) முதல் நீக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், இடைமாறும் விமான பயணிகள், கொரோனா நோயாளர் அல்லவென்பதை உறுதிப்படுத்தும் PCR பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

சர்வதேச விமான போக்குவரத்தில் பயணிகள் இடைமாறும் பிரதான கேந்திர நிலையமாக துபாய் உள்ளது.

தெற்காசியாவில் கொரோனா தொற்று அதிகரித்து செல்லும் நிலையில், குறித்த நாடுகளில் இடைமாறும் பயணிகள் துபாய்க்கு செல்வதை தடுப்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தினால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்