வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்ய இணையதளத்தினூடாக விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்ய இணையதளத்தினூடாக விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்ய இணையதளத்தினூடாக விண்ணப்பிக்கலாம்

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2021 | 11:08 am

Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்கு இணையதளத்தினூடாக விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, www.election.gov.lk என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயரை சேர்த்துக்கொள்ள தகுதி பெறும் 18 வயது பூர்த்தியடைந்த இலங்கை பிரஜைகளை பதிவு செய்வதற்கும் தற்போது காணப்படும் இடாப்பில் உள்ள குறைபாடுகள் மற்றும் அச்சுப் பிழைகளை திருத்திக்கொள்வதற்கும் பதிவு மாறுபட்டிருப்பின் அதனை புதுப்பித்துக்கொள்வதற்கும் 2020 ஆம் ஆண்டு பதியப்படாத வாக்காளர்களை பதிவு செய்யவும் இந்த திட்டத்தினூடாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை தெரிவிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்