முன்னிலை சோசலிச கட்சியின் நிர்வாக செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது

முன்னிலை சோசலிச கட்சியின் நிர்வாக செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது

முன்னிலை சோசலிச கட்சியின் நிர்வாக செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2021 | 11:19 am

Colombo (News 1st) முன்னிலை சோசலிச கட்சியின் நிர்வாக செயலாளரும் செயற்பாட்டாளருமான சமீர கொஸ்வத்தவும் செயற்பாட்டாளர் கோகிலா ஹன்சமாலி பெரேராவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற முன்றலில் நேற்று (03) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதனிடையே, பாராளுமன்றத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட அமைதியின்மையினால்
மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காயமடைந்துள்ளார்.

பொறுப்பதிகாரியின் இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்