மகளிருக்கான 10 கி.மீ மரதன் நீச்சல் போட்டியில் தங்கம் வென்றது பிரேசில்

மகளிருக்கான 10 கி.மீ மரதன் நீச்சல் போட்டியில் தங்கம் வென்றது பிரேசில்

மகளிருக்கான 10 கி.மீ மரதன் நீச்சல் போட்டியில் தங்கம் வென்றது பிரேசில்

எழுத்தாளர் Bella Dalima

04 Aug, 2021 | 4:23 pm

Colombo (News 1st) இன்று காலை நிறைவடைந்த மகளிருக்கான 10 கிலோமீட்டர் மரதன் நீச்சல் போட்டியில் பிரேசிலின் Ana Marcela Cunha தங்கப் பதக்கத்தை வென்றார்.

நெதர்லாந்தின் Sharon van Rouwendaal வௌ்ளிப் பதக்கத்தையும் அவுஸ்ரேலியாவின் Kareena Lee வெண்கல பதக்கத்தையும் வெற்றிகொண்டனர்.

இதேவேளை, ஆடவருக்கான இரட்டையர் டிங்கி படகோட்டப் போட்டியில், அவுஸ்ரேலியா தங்கப்பதக்கம் வென்றது.

சுவீடன் வௌ்ளிப் பதக்கத்தையும் ஸ்பெய்ன் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றின.

டோக்கியோ ஒலிம்பிக் விழாவில் Skateboarding போட்டிகளின் Park பிரிவில் தங்கம் மற்றும் வௌ்ளிப் பதக்கங்களை ஜப்பான் சுவீகரித்தது.

Sakura Yosozumi தங்கத்தையும், Kokona Hiraki வௌ்ளிப் பதக்கத்தையும் தமதாக்கினர்.

பிரித்தானியாவின் Sky Brown வெண்கலப் பதக்கத்தை வென்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்