சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் தொடர்பில் விசாரணை

ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

by Staff Writer 03-08-2021 | 12:10 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 'என் சாவுக்கு காரணம்' எனும் தமிழ் வாக்கியம் ஆங்கில எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம் தொடர்பிலான நிழற்படம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி பயன்படுத்திய அறையில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் கையெழுத்து தொடர்பிலான விசேட நிபுணர்கள் சோதனைகளை மேற்கொண்டனர். இதனிடையே, உயிரிழந்த சிறுமி பாடசாலை காலத்தில் பயன்படுத்திய புத்தகங்களை, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுவரில் எழுதப்பட்டுள்ள வாக்கியம், உயிரிழந்த சிறுமியினால் எழுதப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.