வத்தளையின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு

வத்தளையின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு

வத்தளையின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2021 | 10:27 am

Colombo (News 1st) வத்தளையின் பல பகுதிகளில் இன்று (03) காலை 10 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வத்தளை – நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதி, மாபோலயில் ஒரு பகுதி, வெலிக்கடமுல்ல, ஹெந்தல வீதியின் நாயக்கந்த சந்தி வரையான அனைத்து கிளை வீதிகள், அல்விஸ் சுற்றுவட்டம், மருதானை வீதி, புவக்வத்த வீதி, கலஹதூவ மற்றும் கெரவலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஹெந்தல பாலம் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள நீர்க்குழாய் பொருத்தும் பணிகள் காரணமாக 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று காலை 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்