by Staff Writer 03-08-2021 | 10:35 AM
Colombo (News 1st) பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகளை ஒன்லைன் (Online) மூலம் வழங்கும் வேலைத்திட்டத்தை பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
கைத்தொலைபேசி மற்றும் கணினி மூலம் குறித்த சான்றிதழ்களின் பிரதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் F.M.M.B. வீரசேகர தெரிவித்துள்ளார்.
கோரப்படும் சான்றிதழின் பிரதியை விரைவு அஞ்சல் அல்லது அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.