கொத்தலாவல சட்டமூலம்: ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள திருத்தங்கள்

கொத்தலாவல சட்டமூலம்: ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள திருத்தங்கள்

கொத்தலாவல சட்டமூலம்: ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள திருத்தங்கள்

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2021 | 8:14 pm

Colombo (News 1st) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழு தமது நிலைப்பாட்டை கடிதமொன்றின் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

அந்த சட்டமூலத்தில் நான்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குழுவின் நிலைப்பாடாகும்.

அந்த திருத்தங்களாவன…

1. கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தல் மற்றும் நிர்வாகத்திலிருந்து விடுபடக்கூடாது

2. பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் அல்லாத பட்டத்திற்கான விண்ணப்பதாரர்களை இணைத்துக்கொள்ளும் போது வௌிப்படைத்தன்மையுடனான Z புள்ளியை அடிப்படையாகக் கொண்ட நீதியான முறைமை தொடர்பில் சட்டமூலத்தில் தௌிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்

3. தொழில் மேற்கொண்டு ஈட்டும் வருமானத்தில், மீள செலுத்துவதை அடிப்படையாகக் கொண்ட கடன் வழங்கப்படல் வேண்டும்

4. நிர்வாக சபையில் சிவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாகக் காணப்படல் வேண்டும்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்