கொத்தலாவல சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாட தீர்மானம்

கொத்தலாவல சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாட தீர்மானம்

கொத்தலாவல சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாட தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2021 | 10:47 am

Colombo (News 1st) ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று (02) பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.

உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின், அதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக இந்த சந்திப்பின் பின்னர் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

நாட்டு மக்களின் வரிப்பணத்தில், வறிய மாணவர்கள் பயன்பெறும் வகையிலேயே இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் – தமது பிள்ளைகளை வௌிநாடுகளுக்கு அனுப்பி கற்பிக்கும் பெற்றோருக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு மாற்றீடு எனவும் கூறினார்.

இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உட்பட்ட வகையிலான பல்கலைக்கழகமாக மாற்றுவதே சட்டமூலத்தின் முக்கிய நோக்கம் எனவும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்