கும்புறுமூலையில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த தனியார் காணி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

கும்புறுமூலையில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த தனியார் காணி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2021 | 7:57 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – கும்புறுமூலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தனியார் காணி, உரிமையாளரிடம் இன்று கையளிக்கப்பட்டது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 35 ஏக்கர் தனியார் காணி, கடந்த 2018 ஆம் ஆண்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மிகுதி சுமார் 5 ஏக்கர் காணியை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

அத்துடன், உரிமையாளர்களை கண்டுபிடித்து, அவர்களிடம் ஒப்படைப்பதற்காக மேலும் 7 ஏக்கர் காணியும் இன்று விடுவிக்கப்பட்டது.

இதற்கான ஆவணம், வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இராணுவ உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள், காணி உரிமையாளர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்