கடந்த 6 நாட்களில் நாட்டில் 13,877 COVID நோயாளர்கள் பதிவு

கடந்த 6 நாட்களில் நாட்டில் 13,877 COVID நோயாளர்கள் பதிவு

கடந்த 6 நாட்களில் நாட்டில் 13,877 COVID நோயாளர்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2021 | 7:53 pm

Colombo (News 1st) இன்று (03) இதுவரையான காலப்பகுதியில் 1,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதற்கமைய, நாட்டில் இதுவரை 3,15,175 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 6 நாட்களில் நாட்டில் 13,877 COVID நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த 28 ஆம் திகதி நாட்டில் 1,940 COVID நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதியில் இருந்து இதுவரை நாட்டில் நாளாந்தம் 2000-க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

கடந்த 29 ஆம் திகதி 2,370 நோயாளர்களும் 30 ஆம் திகதி 2,460 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

ஜூலை 31 ஆம் திகதி நாட்டில் 2,177 COVID நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த முதலாம் திகதி 2,510 COVID நோயாளர்கள் பதிவானதுடன், நேற்று 2,420 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்