Colombo (News 1st) ஜப்பானின் அன்பளிப்பான AstraZeneca தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நாட்டில் 2,44,251 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
கடந்த 2 நாட்களில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நேற்று மாத்திரம் 1,74,985 AstraZeneca இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கிணங்க, AstraZeneca-வின் இரண்டாவது தடுப்பூசி மொத்தமாக 6 ,30,136 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, 18,03,524 பேருக்கு Sinopharm தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
14 ,503 பேருக்கு Sputnik தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 2,01,507 பேருக்கு Pfizer தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன், அவர்களில் 198 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது.
7,16,581 பேருக்கு Moderna தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனிடையே, இலங்கையில் COVID தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,13,769-ஆக அதிகரித்துள்ளது.
2,382 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
63 COVID மரணங்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதி செய்யப்பட்டன.
இதற்கமைய, இலங்கையில் இதுவரை 4,571 COVID மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
2,80,868 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
