அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்

அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்

அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2021 | 11:45 am

Colombo (News 1st) அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 9.12-க்கு நில அதிர்வு பதிவாகியுள்ளது.

ஏற்கனவே, அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் (Port Blair) 4.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சேத விபரங்கள் வௌியாகவில்லை.

இலங்கைக்கு பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விடயங்கள் தொடர்ந்தும் அறிவிக்கப்படும் என்பதால், கரையோர மக்கள் அச்சமடைய தேவையில்ல என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்