யாழ்.இந்திய துணை தூதுவராக ராகேஷ் நடராஜ் பதவியேற்பு

யாழ். இந்திய துணை தூதுவராக ராகேஷ் நடராஜ் பதவியேற்பு 

by Staff Writer 02-08-2021 | 10:30 PM
Colombo (News 1st) யாழ். இந்திய துணை தூதுவராக ராகேஷ் நடராஜ் இன்று (02) தனது அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்துள்ளார். ராகேஷ் நடராஜ் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். சில காலம் அவர் கண்டியில் இந்திய துணைத் தூதுவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.