தொடரும் ஆசிரியர் - அதிபர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 02-08-2021 | 2:04 PM
Colombo (News 1st) அரச சேவைகளை இன்று (02) முதல் வழமைபோன்று முன்னெடுக்குமாறு வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாகாண, வலய, கோட்டக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். எனினும், தாம் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கப் போவதில்லை என 14 ஆசிரிய - அதிபர் தொழிற்சங்கங்கள் கடிதம் மூலம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளன. ஆசிரிய, அதிபர் தொழிங்சங்கங்கள் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Online கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் - அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று (02), 22 ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.