Colombo (News 1st) இன்று (02) காலை 06 மணி வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2,510 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
அவர்களில் 20 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
நேற்றைய தினம் பதிவாகிய கொரோனா தொற்றாளர்களுடன் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 311,349 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 155 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 384 பேரும் யாழ். மாவட்டத்தில் 65 நபர்களும் புத்தளம் மாவட்டத்தில் 06 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 33 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 32 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 நபர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 24 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 48 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 38 பேரும் வவுனியா மாவட்டத்தில் 32 பேரும் மன்னார் மாவட்டத்தில் 12 நபர்களும் கடந்த 24 மணி நேரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் (31), 67 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (01) தெரிவித்திருந்தார்.
