English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
02 Aug, 2021 | 5:29 pm
Colombo (News 1st) நேற்றைய தினம் (01) 69,266 பேருக்கு AstraZeneca இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இந்த வாரம் முழுவதும் AstraZeneca தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் முதலாவது AstraZeneca தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், தடுப்பூசி செலுத்தும் நிலையத்திற்கு சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, 24 மணித்தியாலங்கள் இயங்கும் நாட்டின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நிலையம் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும் தியத்த உயன தடுப்பூசி மையம் இன்று (02) முதல் எதிர்வரும் புதன்கிழமை (04) வரை 24 மணித்தியாலங்களும் இயங்குவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், AstraZeneca தடுப்பூசிகளின் அடுத்த தொகுதி எதிர்வரும் சனிக்கிழமை (07) நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அக்கிரா சுகியாமா (Akira Sugiyama) அறிவித்துள்ளார்.
23 Jul, 2022 | 02:21 PM
15 Jun, 2022 | 05:31 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS