இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு

எழுத்தாளர் Staff Writer

02 Aug, 2021 | 1:24 pm

Colombo (News 1st) செப்டம்பர் மாத இலக்கிற்கு முன்னர் இலங்கை சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் எதனம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் அவர் ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பொது சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் எடுக்கும் முயற்சிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் நன்றி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்