ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக M.S. தௌபீக் நியமனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக M.S. தௌபீக் நியமனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக M.S. தௌபீக் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2021 | 10:33 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.S. தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ‘வீட்டுக்கு வீடு மரம்’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் நான்காவது வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட வேலைத்திட்டம் தோப்பூர் பகுதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.S. தெளபீக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு M.S. தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்