மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவைகள் இன்று (01) முதல் மீள ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவைகள் இன்று (01) முதல் மீள ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2021 | 2:47 pm

Colombo (News 1st) மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவை இன்று (01) முதல் ஆரம்பமாவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின் படி இயங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் ​போது சுகாதார விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் திலும் அமுனுகம இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்