ஆப்கானிஸ்தான் மீதான தலிபான் தாக்குதல்கள் தொடர்கின்றன

ஆப்கானிஸ்தான் மீதான தலிபான் தாக்குதல்கள் தொடர்கின்றன

ஆப்கானிஸ்தான் மீதான தலிபான் தாக்குதல்கள் தொடர்கின்றன

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2021 | 6:41 pm

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானின் 03 நகரங்களை இலக்கு வைத்து தலிபான்களால் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்கின்றன.

ஆப்கானிஸ்தானின் தென் மற்றும் மேற்கு பகுதிகளில் அமைந்துள்ள Herat, Lashkar Gah மற்றும் Kandahar ஆகிய நகரங்களிலேயே தாக்குதல்கள் தொடர்கின்றன.

தலிபான்களால் கந்தஹர் விமான நிலையம் மீது சுமார் 03 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து வெளிநாட்டு படைகளும் வௌியேறுமென அறிவிக்கப்பட்டதிலிருந்து தலிபான்கள் பல பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த 03 முக்கிய நகரங்களிலும் மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் தற்போது இடம்பெற்று வரும் வன்முறைகளை பொறுத்து, அரச படைகளின் இருப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர் ஒருவர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்