இலங்கை அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் பரிசு

இலங்கை அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் பரிசு

by Bella Dalima 31-07-2021 | 3:29 PM
Colombo (News 1st) இந்தியாவிற்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரை வெற்றிகொண்ட இலங்கை அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் பரிசாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.