கொழும்பில் நாளை (01) AstraZeneca இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளது

கொழும்பில் நாளை (01) AstraZeneca இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளது

கொழும்பில் நாளை (01) AstraZeneca இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

31 Jul, 2021 | 2:24 pm

Colombo (News 1st) தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் நேற்று 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

நேற்று 5,13, 820 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதேவேளை, ஜப்பானின் COVAX திட்டத்தினூடாக வழங்கப்படும் 728,460 AstraZeneca தடுப்பூசிகள் இன்று மாலை நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் சனிக்கிழமையும் இதே அளவான AstraZeneca – Covishield தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன.

இவ்வாறு கிடைக்கும் தடுப்பூசிகள், ஏற்கனவே AstraZeneca தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக வழங்கப்படவுள்ளன.

ஏனையவை கேகாலை மாவட்டத்திற்கு அனுப்பப்படவுள்ளன.

AstraZeneca தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நாளையும் (01) நாளை மறுதினமும் (02) கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிலும் பத்தரமுல்ல தியத்த உயன வளாகத்திலும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்